சம்மாந்துறை மண்ணை சேர்ந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க ஏனைய கட்சியினர் முயற்சிக்கின்றனர்-



Mohamed Jafeer Mahroof-

ம்மாந்துறை மண்ணை சேர்ந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக ஒலிக்க வேண்டும் என உருவாக்கிய இந்த கட்சியை சம்மாந்துறையில் இருந்து ஒழிக்க ஏனைய கட்சியினர் முயற்சிக்கின்றனர் இதற்கு சம்மாந்துறை மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டர்கள் என சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியல் வேட்பாளர் மௌலவி எம்.ஜே.எம்.இர்பான் தெரிவித்தார்.

சம்மாந்துறை விளினியடி 07ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி எம்.எம்.ஜௌபிரை ஆதரித்து மகளிர் சங்க பிரதிநிதிகளுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை அழிப்பதற்காக பல்வேறு சக்திகள் இந்த மண்ணில் தேர்தலில் களம் இறங்கியுள்ளன. இதனை நாம் அனைவரும் நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர்கள் கோடிக் கணக்கான நிதியைக் கொண்டு தற்போது சம்மாந்துறை பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திகளை செய்துள்ளதுடன் இன்னும் பல அபிவிருத்தி வேலைகளை செய்தும் வருகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கையில் தான் இன்று அரசாங்கத்தின் பலமான அமைச்சுக்கள் இருந்து வருகின்றன. எமது பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக இருப்பதன் காரணமாக சம்மாந்துறையில் கல்வி, வீதி, விவசாயம் போன்ற பல்வேறு துறைகள் பாரிய அபிவிருத்தி கண்டு வருகின்றது.

கடந்த தேர்தலில் மயில் கட்சிக்கு அளித்த வாக்கினால் சம்மாந்துறை மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்பது வெளிப்படை உண்மை என்பதை யாவரும் அறிவீர்கள், அவர்களுக்கு நீங்கள் பொன்னான வாக்குகளை வழங்கும் போது அவை எதுவித பிரயோசனம் அல்லாததாக மாறுவது மட்டுமல்லாது அக்கட்சிகளுக்கு வழங்கப்படும் உங்களுடைய வாக்குகள் குப்பை கூடைக்குள் செல்லும் பெறுமதியற்ற வாக்குகளாக மாறிவிடலாம். ஆகையால் உங்களது பெறுமதியான வாக்குகளை யானை சின்னத்திற்கு வழங்குவதன் ஊடாக எமது சம்மாந்துறையை கட்டியெழுப்ப முடியும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கடந்த அரசாங்கத்தில் கிடைக்காத அதிகாரம் தற்போதைய அரசாங்கத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது எனவே எதிர்வரும் 10ஆம் திகதி வெளிவரும் தேர்தல் முடிவுகளின் மூலம் சம்மாந்துறை பிதேச சபையை ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸின் கையில் வழங்குவீர்கள் என நம்புக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -