உங்கள் ஊர் இளைஞனை என் கரம் பிடித்து அழைத்து வந்திருக்கிறேன்



 லேட்சுமி பஹல வட்டார பிரச்சார கூட்டததில் திலகர் எம்பி

2010 ஆம் ஆண்டளவில் லெட்சுமி தோட்டத்தில் நூலகத்திறப்பு விழா ஒன்றிற்கு வருகை தந்து நூல்களை அன்பளிப்பாக வழங்கிவிட்டுச் சென்றேன். அதற்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் கிடைத்தது. அதன் கையெழுத்து அழகாகவும் அது எழுதப்பட்ட விதம் வித்தியாசமாகவும் இருந்தது. அந்த கடிதம் எழுதிய இளைஞனை அழைத்து என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்டேன். Nவைலயில்லாமல் இருக்கிறேன் என்றார். ஆனால் உயர்தரத்தில் கணிதப்பிரிவில் கற்றிருந்தார். வாருங்கள் என அழைத்;துச்சென்றேன். எனது உதவியாளராகவும் எனது பேராசியரின் உதவியாளராகவும் வேலைவாயப்பு கொடுத்தேன். அடுத்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்தின் உதவியாளராக்கினேன். அவரே இன்று அமைச்சர் திகாம்பத்தின் பிரத்தியேக அலுவலராக நியமனம் பெற்றுள்ளார். இன்று அவரே உங்கள் முன் மக்கள் பணிக்காக வேட்பாளராக களம் இறங்கி என கரம் பிடித்து வந்து உங்கள் ஊரிலேயே அவருக்கு வாக்கு கோருகிறேன். இந்த இளைஞனின் வளர்ச்சிப்பாதையும் இந்த ஊரின் வளர்ச்சிப்பாதையும் ஒருங்கே நடைபெற்றிருப்பதை இன்று பார்க்கிறேன். அவருக்கு அங்கீகாரம் அளியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.


நோர்வூட் பிரதேச சபை லெட்சுமி பஹல வட்டாரத்தில் போட்டியிடும் சுப்பையா கமலதாசனை ஆதரித்து எலிபட தோட்டடத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை நாட்டில் ஆறாயிரம் பேருக்கு ஒரு பிரதேச செயலகமே கூட இருக்கிறது. ஆனால் பன்னிரண்டாயிரம் சனத்தொகை கொண்ட கிராம சேவகர் பிரிவு என பல தடவைகள் பாராளுமன்றில் பேசப்பட்ட பொகவந்தலாவை ‘கேர்க்கஸ்வேல்ட்’ கிராமசேவகர் பிரிவுதான ஏல்லா இடங்களிலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாகவோ பகுதியாகவோ இணைக்கப்பட்டு வடடாரம் உருவாக்கப்பட்டபோது இந்த கிராம சேவகர் பிரிவு ‘இஹல’ ‘பகல’ என இரண்டு வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு வட்டாரங்களும் நான்கு கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட வேண்டும் எனும் தொடர்கோரிக்கையை நாங்கள் முன்கொண்டு செல்லவுள்ளோம். நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 குடும்பங்களுக்கு கூட ஒரு கிராம சேவகர் பிரிவு இருக்கிறது. ஆனால் இங்கே 3500 குடும்பத்துக்கே ஒரு கிராம சேவகர் பிரிவு. கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் பத்து லட்சம் ஒதுக்கப’;படுகின்றது. அங்கு அதனை நூறு குடும்பங்கள் பயனடைய செலவிடும்போது நாம் மூவாயிரம் குடும்பங்கள் பங்குபோட்டுக்கொள்ள வேண்டியயள்ளது. எனவே எமது கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிப்பதே அடுத்த இலக்காக இருக்க வேண்டும். அதுவே இங்கு அபிவிருத்திக்கு அதிகளவ நிதியினைக் கொண்டு வரும்.
இன்று பிரதேச சபையில் என்ன வேலைத்திட்டத்தை முன்வைத்திருக்கிறோம் எனும் அடிப்படையில் பிரச்சாரத்தை முன்வைக்கிறார்கள் இல்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி தமது கடந்த கால வேலைத்திட்டங்களை எடுத்துக்காட்டியும் எதிர்கால Nவைலத்திட்டங்களை எழுததில் சமர்ப்பித்துமே வாக்குகளைக கோருகின்றது. தேயிலை மலைகள் காடுகளாகிவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மைதான் காடுகளாகிவிட்டது. காரணம் என்ன புற்களை அகற்றும் ரசாயண மருந்தினை தடை செய்திருக்கிறார்கள். அதற்கான பிரேரணையை முன்வைத்தவர் யார்? ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன. எனவே அவரின் மடியில் உட்கார்ந்திருக்கிறோம் என கூறுபவர்கள் அவரிடம்தானே அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இந்த பிரதேச சபை தேர்தலில் பிரச்சாரமாக முன்னெடுத்து வெற்றிபெறுவதால் வெற்றிபெற்றவர்கள் புல் பிடுங்க போகிறார்களா? இல்லை. பிரதேச சபை உறுப்பினரின் வேலை அதுவல்ல. மக்களிடம் நிறைNவுற்றக் கூடிய வேலைத்திட்டத்தை முன்வைத்து மாத்திரமே நாங்கள் பிரச்சாரங்களை முன்கொண்டு செல்கின்றோம்.
உதவி ஆசிரியர்களை ஆறாயிரம் ரூபா மாதச் சம்பளத்திற்கு நியமனம் பெற்றுக்கொடுத்தவர்கள் யார், நாங்களா, இல்லையே இ.தொ.காதான் எமது இளைஞர்களின் கல்வித்திறமையை அற்ப விலைக்கு விற்றது. இவர்களுக்கு நியமன்ங்களை நிரந்தரமாக்குவோம் என நாங்கள் கூறியுள்ளோம். பாராளுமன்றில் செய்யாதவர்கள் மஸ்கெலியாவில் செய்வார்களா என கேட்கிறார்களாம். அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது ‘மஸ்கெலியாவையும்’ ‘நோர்வட்டையும்’ பாராளுமன்றத்தில் பேசி பிரதேச சபை ஆக்கியது நாங்களே அதேபோல ஆசிரிய உதவியாளர்களின் நிரந்தர நியமனத்துக்காக பல தடவை பாராளுமன்றில் பேசியுள்ளோம். எதிர்வரும் ஏப்பிரல் மாதமளவில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.
இவை எல்லாம் தேசிய மட்ட விடயங்கள். அதனை நாம் முன்னெடுப்போம். இப்போது தேவை ஊருக்கு ஒரு நல்ல பிரதிநிதி. அவர்கள் வெற்றிப்பெறுவதனால் பிணை முறி மோசடிகாரர்களின் சட்டையைப்பிடித்து கேள்வி கேட்க போவதில்லை. ஊரில் அபிவிருத்தித் திட்டங்களையே முன்னெடுக்க முடியும். அதைத்தான் இந்த கமலதாசன் செய்வதாக தனது தேர்தல் அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். தான் இது வரை அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் தான் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகளை சுட்டிக்காட்டியிருக்கிறார். பொகவந்தலாவ – புளியாவத்தை பகுதியை இணைக்கும் பாதை அமைச்சர் திகாம்பரத்தினால் கார்ப்பட் பாதையாக அமைக்கப்பட்டுவருகின்றது. இந்த லெட்சுமி தோட்டத்தை ஊடறுத்தே செல்கிறது. இந்த ஊரில் பல தனிவீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாற்றமடைந்துவரும் ஊருக்கு ஒரு நூலகம், சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், சிறு வீதி அபிவிருத்தி, என ஊர் மட்ட அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள உங்கள் ஊர் இளைஞனை யானைக்கு புள்ளடியிட்டு தெரிவு செய்துகொள்ளுங்கள். நாங்கள் அவருக்கும் உங்களுக்கும் என்றும் பக்ககலமாக இருப்போம். என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -