தமிழ் மக்கள் தங்கள் ஒற்றுமையையும்.பலத்தையும் இந்தத் தேர்தலில் வெளிக்காட்ட வேண்டும்






எதிர்க் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் வேண்டுகோள் 

பி.எம்.எம்.ஏ.காதர்-

அரசில் தீரவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் மிகவும் உறுதியாக நிற்கின்றார்கள்.அதை மேலும் பலப்படுத்தி ஊர்ஜிதப்படுத்தவதற்கு இந்தத் தேர்தலில் களமாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் தங்கள் ஒற்றுமையை வெளிக் கொண்டு வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,எதிர்க் கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிமை(01-02-2018) கல்முனை சேனைக்குடியிருப்பில்; நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னணி மிக முக்கியமானதாகத் தென்படுகின்றது.தற்போழுது உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற புதிய அரசியல் சாசனத்தில் விதிக்கப்பட்டிருக்கின்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கு அங்கீகாரம்,பலம் அதிகரிக்கும்;

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில் பாரளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,கோடீஸ்வரன் உள்ளீட்ட கட்சி முக்கியஸ்தர்களும்.வேட்பாளர்களும்; கலந்து கொண்டனர்.இங்கு ஆர்.சம்பந்தன் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது:-தற்போதய சிந்தனையின் அடிப்படையில் இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்கள்; அரசியல் சாசனத்தில் ஒரு பிரமான பட்டியலாகச் சேர்க்கப்பட இருக்கிறது.

அது மாத்திரமல்ல அரசியல்; அதிகாரங்கள் சேர்க்கப்;பட்டது மட்டமல்லாமல் மத்திய அரசாங்கமோ,மாகாண அரசாங்கமோ தங்களுடைய சட்டத்தை ஆக்கும் அதிகாரங்களின் அடிப்படையில் பல் வேறு சட்டங்களை உருவாக்குகின்ற பொழுது அதிகமான சட்டங்களை அமுல் படுத்துகின்ற அதிகாரம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட என்று ஆலோசனை முன்வைக்கப்பட்டு தற்போது அது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

அவ்விதமான முடிவோன்று வருமாக இருந்தால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மத்தியினால்,மாகாணத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரங்கள் சம்பந்தமாக பல விடையங்கள் கொடுக்கப்படலாம்.அந்தத் தேர்தலைத் தான் நீங்கள் எதிர்நோக்கியிருக்கின்றீர்கள்.ஆனால் நான் முன்பு கூறியது போல இன்று மக்களின் மனங்களில் எழுந்திருக்கின்ற முக்கியமான சில கேள்விகளுக்கு நான் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்தத் தேர்தலின் பின்னணியில் உள்ள சில விடையங்களைப்பற்றி நான் பேசலாம் என்று நினைக்கின்றேன்.எழுபது வருடங்களாக நாங்கள் போராடி பல துன்பங்ளை அனுபவித்து தியாகங்களைச் செய்து அரசியல் ரீதியாகவும்ääசாத்வீக ரீதியாகவும்ääஜனாயக ரீதியாகவும் போராடி ஒத்துழைத்து ஒப்பந்தங்களைச் செய்து இறுதியில் முப்பது வருட ஆயுதப் போராட்டமும் நடைபெற்று அதன் காரணமாக பல்வேறு அழிவுகளையும்ää இழப்புகளையும்ää துன்பங்களையும்ää துயரங்களையும் எதிர்நோக்கினோம்.

ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்தன் பிறது நாங்கள் மீண்டும் எமது போராட்டத்திதைத் தொடர்ந்து எமது மக்கள் தங்களின் தெளிவான சிந்தனையின் அடிப்படையில் கொள்கையின் அடிப்படையில் ஒற்றுமையாக கொள்கையில் இருந்து விலகாமல் மிகவும் உறுதியடைந்தன் நிமிர்த்தும் நமது போராட்டம் முன்னெடுக்கக் கூடிய சூழல் உருவாகின்றது.

தந்தை செல்வா அவர்கள் 1949 ஆண்டு தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பித்து 1956 ஆண்டு; ஆரம்பமான தேர்தல் தொடக்கம் நடைபெற்ற எல்லாவிதமா தேர்களையும் சந்தித்திருக்கின்றோம்.வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் மிகவும் உறுதியாக இருந்திருக்கின்றார்கள் அவர்கள் கொள்கை அடிப்படையில் விலகவில்லை.

யுத்தம் முடிந்த பிறகு நடைபெற்ற தேர்தல்களில் கூட மிகவும் உறுதியாக இருந்திருக்கின்றார்கள்.அந்த அடிப்படையிலே இந்தத் தேர்தலிலும் உறுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.2012ஆம் ஆண்டு இந்த நாட்டில் பாரிய மாற்றம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அந்த மாற்றத்தை ஏற்படுத்தவதற்கு எமது மக்கள் பாரிய பங்களிப்பைச் செய்தார்கள் அந்தப் பங்களிப்பைச் செய்வதற்கு மக்களுக்கு முக்கியமான காரணங்கள் இருந்தது.இந்தியääஇலங்கை ஒப்பந்தத்தின் கீழ் பலமுள்ள அந்த சாசனத்தின் பிரகாரம் முதல் முறையாக மாகாண ரீதியான அதிகாரப் பகிர்வு அரசில் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட போதிலும் கூட அது ஒரு முழுமையான தீர்வாக அமையவில்லை.

அது உறுதியான நிரந்தரமான நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய போதிய அளவிலான அதிகாரப் பகிர்வாக அமையவில்லை.அந்தக் காரணத்தின் நிமிர்த்தம் தமிழ் தேசியக் கூட்டமைப்போääஇலங்கை தமிழ் அரசுக் கட்சியோääதமிழர் விடுதலைக் கூட்டணியோ அந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.ஒரு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்று போராடி வந்தோம். ஆகவே அரசில் தீரவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் மிகவும் உறுதியாக நிற்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -