மஹிந்தவாலேயே தமிழீழம் மலரும் என்கிறார் சம்பந்தன்!!!



னநாயக ரீதியில் நாடாளுமன்றம் அரசமைப்பு சபையாக மாற்றியமைக்கப்பட்டு தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலின்போது புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட்டால் தமிழீழக் கனவு நனவாகும் என்று அப்பாவி சிங்கள மக்களுக்கு தவறான கருத்துகளை விதைத்திருந்தனர். என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாக்கு வீதம் ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்துகொண்டே வந்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் கொடுத்த ஆணையின் பிரகாரம் நல்லாட்சி அரசு தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கட்டிகள் மற்றும் சமகால பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் தனது ஆணையை வழங்கயுள்ளனர். மொத்தமாக 56 வாக்கு வீதம் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே காணப்படுகிறது. கடந்த மூன்று தேர்தல்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே மஹிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் நாடாளுமனறில், பிரச்சினையை எழுப்ப முடியாது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையின் பிரகாரம்தான். ஆட்சி நடைபெறுகிறது. இதனால் நாட்டின் சட்டம் வேறு திசைக்கு திரும்ப முடியாது.

உள்ளூராட்சி தேர்தல் பிரசாரம் ஆரம்பித்த போதே முன்னாள் ஜனாதிபதி கூறியிருந்தார், சிலவேளையில் இந்த தேர்தல் அரசு வெற்றிபெற்றால் தமிழ் ஈழக் கனவு நனவாகும் என்று கூறினார். அரசமைப்பு உருவாக்கப்படுமாக இருந்தாலும் தமிழ் ஈழம் மலரும் என்று கூறியிருந்தார்.

13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்கப்போவதாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது நாடாளுமன்றத்தை அரசமைப்பு சபையாக மாற்றப் அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். எதிரணியும் ஏற்றுக்கொண்டிருந்தனர். எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வழிநடத்தில் குழுபற்றியும் பேவில்லை தற்போது திடீரென மஹிந்த ராஜபக்ஷ தமிழ் ஈழம் உருவாகின்றது என கூறுகிறார். அப்பாவி சிங்கள் மக்கள் மத்தியில் பிழையான தகவல்களை விதைக்கின்றனர். இதனைச் சொல்லி சொல்லிதான் தாமரை மொட்டுக்கு வாக்களிக்குமாறு மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தனர்.

தெற்கு அப்பாவி மக்கள் உண்மைகளை அறிய வேண்டும். பிழையான தேர்தல் பிரசாரத்தின் மூலமே பொதுஜன பெரமுன வெற்றிபெற்றது. தமிழ் ஈழத்தை தாமரை மொட்டுதான் கொடுக்கப்போகிறது.“ என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -