நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் களத்தில் இறங்கி வேலை செய்யும் பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யபடாத விடத்து தேசிய பட்டியலில் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.




– வேள்வி அமைப்பின் தேசிய தலைவி திருமதி பீ.லோகேஸ்வரி-

( எம்.ஐ.எம்.அஸ்ஹர் வீ.ரீ.சகாதேவராஜா )
வேள்வி (சமய சமூக கலாசார பொருளாதார பண்பாட்டு அபிவிருத்தி மன்றம் ) பெண்கள் அமைப்பினால் மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ரெஸ்ரோரண்டில் கடந்த திங்கட் கிழமை ( 5 ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ” நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் ” எனும் தொனிப்பொருளிலான ஊடகவியலாளர் செயலமர்வில் உரையாற்றிய வேள்வி அமைப்பின் தேசிய தலைவியும் இலங்கை அன்னையர் புதல்விகள் அமைப்பின் உறுப்பினரும் ஆசிய கிராமிய பெண்கள் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினரும் பெண்களும் அரசியல் பீடமும் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினருமான திருமதி பீ.லோகேஸ்வரிதெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே நாடு தளுவிய ரீதியில் 53400 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.இதில் 8293 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். பல போராட்டங்களுக்கு பிற்பாடு பெண்களுக்கு தேர்தலில் 25 வீத ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் தெரிவு செய்யப்படுவோரில் கிட்டத்தட்ட 2000 பெண்கள் அதில் அடங்க வேண்டும்.

தேர்தலின் போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்பு வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள பெண்களுக்கு தேசிய கட்சிகளினால் பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தல்களும் இடர்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை வேள்வி அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த தேர்தலில் கிராம மட்டத்தில் கிராமத்தைப்பற்றி அந்த கிராமத்திலுள்ள பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி நன்கு தெரிந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட பெண்களுக்கே முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.

வன்முறையற்ற சுதந்திரமான நேர்மையான இலங்கையை உருவாக்கவே வேள்வி அமைப்பு விரும்புகின்றது. தேர்தலின் போது பெண்கள் தாம் விரும்பிய கட்சிக்கும் வேட்பாளருக்கும் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்யப்படுவதுடன் அவர்களுக்கான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். தேர்தலில் களமிறங்கியுள்ள பெண் வேட்பாளர்கள் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக அடாவடித்தனம் துஸ்பிரயோகம் என்வற்றை தோற்றுவிக்காத வகையில் அரசு பாதுகாக்க வேண்டும்.

தற்போதய அரசியலை சாக்கடை என்று அழைப்பதிலிந்து பெண் உறுப்பினர்கள் அரசியல் அதிகாரத்தை கையிலெடுப்பதன் மூலம் அந்த அரசியல் சாக்கடையை துப்பரவு செய்து சமாதானம் மிக்க ஊழலற்ற சகிப்புத்தன்மையான நாட்டிலுள்ள எல்லா மக்களும் போற்றத்தக்க அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும்.

தேர்தலில் இலங்கையில் பிறந்த எல்லா பெண்களும் போட்டியிட முடியும் ஆனால் அந்த பெண்கள் தாம் வாழும் பிரதேசத்தில் வாழும் மக்கள் பற்றிய தமது கிராமம் பற்றிய கரிசனையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

வேள்வி அமைப்பானது நாட்டிலுள்ள அனத்து இன பெண்களுக்கும் அரசியல் அதிகாரத்தை வழங்கும் தேசிய அமைப்பாகவும் விளங்குகின்றது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெண்களுக்கு அரசியில் ரீதியாக அநீதிகள் இழைக்கப்படுமேயானால் நியாயம் கேட்டு சட்ட ரீதியாக போராடவும் வேள்வி அமைப்பு தயங்க மாட்டாது. என்று தெரிவித்தார்.

மேற்படி செயலமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் வேள்வி அமைப்பின் கிழக்கு மாகாண தலைவியுமான கலாநிதி அனூசியா சேனாதிராஜா வேள்வி அமைப்பின் உதவி தலைவியும் மீசான் பெண்கள் அபிவிருத்தி அமையத்தின் தலைவியுமான ரிலிபா பேகம் வேள்வி அமைப்பின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் யுசுப் பாத்திமா நிஸ்றத் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் நற்பிட்டிமுனை 9 ஆம் வட்டார வேட்பாளர் நடராசா நந்தினி சேனைக்குடியிருப்பு 8 ஆம் வட்டார வேட்பாளர் பேரின்பராஜா மனோரஞ்சனி உள்ளிட்ட வேள்வி அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -