பள்ளிக்குடியிருப்பில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன்
றிசாத் ஏ காதர்-
அக்கரைப்பற்று பிரதேச சபைகக்காக மயில் சின்னத்தில் போட்டியிடம் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி விடயத்தினை அவர் தெரிவித்தார்.
தொடரந்து அவர் உரையாற்றுகையில்,
மக்களின் உரிமையை வெல்வது, அபிவிருத்தியை அடைவது எப்படி என்று காண்பிக்க ஒரு முறை மயில் சின்னத்துக்கு ஆணை தாருங்கள்.
அக்கரைப்பற்று பிரதேச சபை 5ஆசனங்களோடு, மிகவும் கஷ்டத்துடனும், வறுமையுடனும் வாழுங்கின்ற மக்களை கொண்டுள்ள பிரதேசம். அதனை திட்டமிட்டு அபிவிருத்தி செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.
நிலையான அபிவிருத்தி திட்டத்தையும், நேர்மையான முறையில் வாழ்வாதார வசதியையும், இம்மக்களுக்கு இருக்கின்ற பல பிரச்சினைகளையும், நேர்த்தியான வகையில் நான்கு வருட திட்டத்தை வகுத்து செயற்படுத்துவதுக்கு ஆசைப்படுகின்றோம். அதனால்தான் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்கின்ற ஒன்றை உருவாக்கி உங்கள் முன் ஆணை கேட்டு வந்திருக்கின்றோம்.
அரசியல் ரீதியாக முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடமாட்டாதா என்கிற வேதனை பெரும்பான்மையான முஸ்லிம் மக்களுக்கு இருந்துவந்தது. அதனை நாங்கள் நிறைவேற்றுகின்ற ஒரு பணியின் சிலபடிகளுக்கு நகர்ந்திருக்கின்றோம். இந்த நகர்வை இம்மக்கள் அங்கீகரித்தால் எதிர்காலத்தில் இன்னும் வீரியமாக இந்த அமைப்பு உருமாறும். அதனூடாக முஸ்லிம் மக்களின் இருப்பு, வாழ்வியல் விவகாரம் மற்றும் சமூகம்சார்பான விடயங்கள் என எல்லாவற்றுக்கும் தீர்வினை பெற்றுத்தருகின்ற கட்சியாக இந்தக்கூட்டமைப்பு விளங்கும்.
பெருந்தலைவர் மர்ஹ_ம் அஷ்ரப் உருவாக்கிய மு.கா.கட்சி எந்தக் கொள்கையும் இல்லாமல் தற்போது பயணிக்க துவங்கியுள்ளது. மேடைகளிலே பேசுவதுக்கு ஏறினால் மக்களை வம்புக்கு இழுக்கின்ற சண்டியர்போலவே அதனுடைய தலைவர் ரவுப் ஹக்கீம் பேசப்பழகியிருக்கின்றார். இடத்துக்கு ஏற்றால் போல் மாறி மாறி பேசுகின்ற தலைமையாக அவர் மாறியிருக்கின்றார்.
அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் யானைக்கு அளிக்கின்ற வாக்குகளால் எதனையும் சாதித்துவிடமுடியாது. அதற்கு பல விடயங்கள் சான்று பகர்கின்றது. மாகாணத்தின் உச்ச அதிகாரம் மு.கா.கட்சிக்கு இருந்தது. மத்திய அரசினுடைய அதிகாரமும் இருந்தது. இந்த பிராந்தியங்களில் நடைபெற்றது என்ன என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எனவே நான்கு வருட பிரதேச சபையினுடைய அதிகாரத்தை இம்முறை மயில் சின்னத்தில் போட்டியிடுகின்ற இந்தக்கட்சிக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருஙகள்.
வடமாகாணத்தில் எமக்கு அம்மக்கள் வழங்கிய ஆணையை கொண்டு பேரம்பேசும் சக்தியை பெற்று தலைநிமிர்ந்து, நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். அதே போல் இப்பிராந்தியங்களிலுள்ள அடிப்படை வசதிகள் தொட்டு காணிப்பிரச்சினை என எல்லாவற்றுக்கும் நிரந்தர தீர்வினை பெற்றுத்தர ஆசைப்படுகின்றோம்.
இந்த சமூக மக்கள் கஷ்டத்தில் வாழ்கின்றனர். வட்டமடு காணிக்காக வீதியில் இறங்கத்தொடங்கினர், பொத்துவில் காணிகளை வன இலாகா கையகப்படுத்துகின்றது. ஆனால் வாக்குகளை பெற்ற தலைவரும், கட்சியினால் நாடளுமன்றம் சென்று பதவிகளைப் பெற்றவர்களும் சொகுசுவாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றர்.
எனவே இந்த முறை உங்கள் ஆணையை எமக்கு தாருங்கள் அந்த ஆணையின் ஊடாக இலங்கை வாழ் முஸ்லிமகளுக்கு இல்லாமல் போன பேரமபேசும் சக்தியை மீளவும் கொண்டுவந்து நிறுத்துவோம் என்றார்.