தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 66 ஆயிரம் பொலிசார்



னிக்கிழமை நடைபெறவுள்ள உளளுராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு 
கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசாரை கடமையில் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர தெரிவித்தார்.

இவர்களுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இவர்கள் நாளை கடமைகளை தொடங்குவார்கள் என திரு.குணசேகர கூறினார்.

முப்படைகளை தேர்தல் வாக்களிப்புக்கு பின்னர் கடமையில் ஈடுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் விசேட அதிரடிப்படையினரின் சேவையை பெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


அவர் நேற்றுசூ கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ஊள்ளுராட்சி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும். வேட்பாளர்கள் இரவு 9 மணிக்குப் பின்னர் வீடு வீடாக சென்று வாக்கு கேட்க முடியாது. தமது அலுவலகங்களில் கட்சி சின்னங்களையோ, கொடிகளையோ காட்சிப்படுத்த முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -