வலம்புரி கவிதா வட்டத்தின் 46 வது கவியரங்கு தேசபந்து தெ. ஈஸ்வரன்அரங்கில்
வலம்புரி கவிதா வட்டத்தின் 46 வது கவியரங்கு 01-03-2018 வியாழக்கிழமைகாலை 10 மணிக்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெறும்.தேசபந்து தெ. ஈஸ்வரன் நினைவரங்கில் நடைபெறும் கவியரங்கிற்குகவிஞர் எஸ். துனபாலன் தலைமை தாங்குவார். கொழும்பு விவேகானந்தகல்லூரி அதிபர் திரு. ஆர். இராமையா அவர்கள் சிறப்பதிதியாக கலந்துதெ. ஈஸ்வரன் அவர்கள் பற்றி உரையாற்றுவார். கவிதை பாடவிரும்புவோர் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் (0714929642), செயலாளர்இளநெஞ்சன் முர்ஷிதீன் (0777388149) அல்லது செயற்குழு உறுப்பினர்ஈழகணேஷ் (0717563646) உடன் தொடர்பு கொள்ளவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


