தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், இன்றைய தினம் (10) இதுவரை 20 பேரை கைது செய்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
காலி, பின்னதுவையில் வாக்களிக்கச் சென்ற பெண், தனது வாக்குச் சீட்டை கைபேசியில் படம் பிடித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஹக்மீமன பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
யாப்பஹூவ, மஹாவ பகுதியில் வாக்குச் சாவடிக்கு அருகாமையில் அனாவசியமாக சுற்றித் திரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 9ஆம் திகதி முதல் இன்று வரை தேர்தல் தொடர்பாக சுமார் 900 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அதன்பேரில் சுமார் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -