அஷ்ரப் ஏ சமத்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த முறை 42 உள்ளுராட்சி உறுப்பிணா்கனளில் இருந்து இம்முறை 166 ஆசனங்களை பெற்று எமது கட்சி பாரிய வளா்ச்சிகண்டுள்ளது. 10 சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளோடு பேசிவருகின்றோம். எதிா்வரும் கிழக்கு மாகாணசபைத் தோ்தலிலும் எமது கட்சி இவ்வாறனதொறு முன்னேற்றத்தைப் பெற இதர கட்சிகளோடு சோ்ந்து பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.
மேற்கண்டவாறு இன்று(20) அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அவரது அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக மாநட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இவ் ஊடகமாநாட்டில் பிரதியமைச்சா் அமீர் ்அலி, பாராளுமன்ற உறுப்பிணா்களான இஷாக், எம் மஹ்ருப், எம் நவவி உட்பட கட்சியில் அரசியல் பீட உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.
அங்கு அவா் தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில்
ஸ்தீரமான ஆட்சிஅமையும் கட்சியுடன் எமது கட்சியும் சோ்ந்த நாட்டின் நலத்திற்காகவும் சிறுபாண்மை மக்களினது அக்கறையிலும் ஈடுபடும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடந்து முடிந்த உள்ளுராட்சி தோ்தலி் நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு 166 ஆசனங்சளை பெற்றுள்ளது. ஜக்கிய தேசிய கட்சியுடனும், அம்பாறை மாவட்டத்தில் மையில் சின்னத்தில் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பாக போட்டியிட்டது. வடகிழக்கு உட்பட நாட்டில் நாம் ஆசனங்களை பெற்றுள்ளோம். அம்பாறையில் கல்முனை மாநகர சபையில் மாத்திரம்் ஒரே ஒரு ஆசனத்தினை கொண்டிருந்த நாம் இம்முறை 8 உள்ளுராட்சி சபைகளில் மொத்தமாக 32 ஆசனங்களை பெற்றிருக்கின்றோம். அம்பாறையில் 5 உள்ளுராட்சி சபைகளில் ்ஆட்சியமைக்கக் கூடிய நிலையில் இருக்கின்றோம். மன்னாரில் இரணடு சபைகளில் ஆட்சியமைக்க கூடிய நிலையல் ஏனைய இரண்டு சபைகளிலும் எமது கட்சி உதவியில்லாமல் ஆட்சியமைக்க முடியாத நிலமை காணப்படுகின்றது.
வவுனியாவில் 20 ஆசனம், மன்னாா் 34 , முல்லைத்தீவு 12, கொழும்பு 2, புத்தளம் 12, மட்டக்களப்பு 14, யாழ்ப்பாணம் 14, கிளிநொச்சி 1 அநுராதபுரம் 4, அம்பாறை 32, திருகோணமலை 18, கம்பஹா 1, களுத்துறை 2, குருநாகல் 2, கண்டி 8 ஆகிய ஆசனங்கள் மொத்தம் எமது கட்சிக்கு 166 ஆகும்.