UNP செயற்பாடுகளில் இருந்து ரவி விலக வேண்டும்



முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் தவிர்ந்து இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்த, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலக் மாரப்பன தலைமையிலான குழு இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் இதனைக் கூறியுள்ளார். 

அந்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, ரவி கருணாநாயக்க கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அந்தக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். 

அதன்படி அவர் கட்சியின் உப தலைவராக எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது என்று அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் மூவரடங்கிய குழுவொன்று கடந்த 17ம் திகதி நிமிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -