பேதங்களை மறந்து ஒன்றுபட்டு உழைத்து முன்னேறுவோம்.




கணேசபுரத்தில் எம்.பி.மஸ்தான் 

பேதங்களை மறந்து ஒன்றுபட்டு உழைத்து முன்னேறுவோம்.
எமக்கென்று ஓர் அரசியல் தலைமையை நாமே உருவாக்கி அபிவிருத்தியின் பங்காளராக. விளங்குவோம் இவ்வாறு கூறினார் எம்.பி.மஸ்தான் காதர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு கணேசபுரம் வட்டாரத்தில் போட்டியிடும் வி.மகேந்திரன் அவர்களை ஆதரித்து இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உரைநிகழ்த்துகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது இத்தேர்தலில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர் திரு.வி.மகேந்திரன் அவர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம் நாம் இப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை இலகுவாக செய்யமுடியும் அதற்கு உங்களது ஒற்றுமையும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாகும்.
ஆகவே இந்த நிலையில் நாம் எதிர்கொள்ளும் பிரதேச சபைத் தேர்தலில் அதிக வாக்குகளை எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு.வி.மகேந்திரன் அவர்களுக்கு வழங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் இறுதியில் கனேசபுரம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -