முஸ்லிம் ஊர்களுக்கு வாக்கு பிச்சை கேட்டுவரும் சிரிசேனவை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்!


கிந்தோட்டை கலவரம் தொடர்பில் மூச்சு விடாத சிரிசேனவின் தேர்தல்பிரசார கூட்டங்களை முஸ்லிம்கள் பகிஷ்கரிக்க வேண்டும் எனபானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவரும் இம்முறை தேர்தலில்பொதுஜன பெரமுனவில் பேட்டியிடும் வேட்பாளருமான இபாஸ்நபுஹான் கோரியுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும்கூறப்பட்டுள்ளதாவது.
ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டஜனாதிபதி மைத்திரிபால முஸ்லிம்கள் தொடர்பில் தனது அசமந்தபோக்கை வெளிப்படுத்தி வருகிறார்.

அன்று அலுத்கமை கலவரம் இடம்பெற்ற போது வெளிநாட்டில் இருந்தமஹிந்த ராஜபக்‌ஷ நாட்டிற்கு வந்து நேரடியாக பேருவளைக்குசென்றார். ஆனால் முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடித்தசிரிசேன இதுவரை கிந்தோட்டை பக்கமும் திரும்பிப்பார்க்கவில்லை.

அது மாத்திரம் அல்லாமல் கடந்த தேசிய மீழாத் விழாவையும் அவர்புறக்கணித்திருந்தார். இப்படியான ஒரு ஜனாதிபதி வாக்கு பிச்சைகேட்டு முஸ்லிம் ஊர்களுக்கு வருகிறார்.முஸ்லிம்கள் விடயத்தில்பாராமுகமாக இருக்கும் சிரிசேனவின் தேர்தல் பிரசார கூட்டாங்களைசொரணை உள்ள முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என அவர்கோரிக்கை விடுத்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -