ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
அமைச்சர் ஹக்கீம் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்வார்!?
-ஐ.ம.கூட்டமைப்பின் வேட்பாளர் ஐ.எச்.இல்லியாஸ் ஹசன் தெரிவிப்பு-
' ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு பிரதேச சபையையும் கைப்பற்றாது! ஏனன்றால் இன்று நிலைமை அப்படித்தான் இருக்கிறது. பொத்துவிலிலிருந்து கல்முனை வரை பார்ப்போமானால், பொத்துவில் பிரதேச சபையை அவர்களால் கைப்பற்ற முடியாது. அடுத்தது அக்கரைப்பற்று. முந்த நாள் வந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் சொல்லி விட்டுப் போனார். புதிய முஸ்லிமின் ஹதீஸ் கதையை! எனவே அக்கரைப்பற்றையும் அவர்களால் வெல்ல முடியாது. அடுத்தது அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை என்று பார்த்தால் அங்கும் அவர்களுக்கு இடமில்லை. சம்மாந்துறை அங்கும் வெல்ல முடியாது. சாய்ந்தமருது, கல்முனையை எடுத்துப் பார்த்தால் ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைநகரமாகவும் காணப்பட்ட கல்முனைக்கு நடந்த கதைகளும் நமக்குத் தெரியும். எனவே கல்முனை மாநகர சபையும் அவர்களுக்குக் கிடையாது. இப்படிப் பார்க்கும் போது தலைமைத்துவத்தின் சாணக்கியம் முடிந்து விட்டது. தோல்வி அடைந்து விட்டது. ஆகவே, அதனால் தான் நான் சொல்கிறேன். பெப்ரவரி 10ந் திகதி அவராகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பதவியை இராஜினாமா செய்வாரென்று' இவ்வாறு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்பாளர் ஐ.எச்.இல்லியாஸ் ஹசன் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அல்-மினா மீனவர் சங்கத் தலைவர் ஏ.மன்சூர் தலைமையில் நிந்தவூர்-09, கடற்கரை வீதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே வேட்பாளர் ஐ.எச்.இல்லியாஸ் ஹசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேசியத்தலைவரும், முன்னாள் மு.கா செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.றசாக் ஜவாத், முன்னாள் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும், வேட்பாளருமான எம்.ஏ.எம்.தாஹீர், வேட்பாளர்களான வாஹீத் மாஸ்டர், எம்.எம்.சம்சுதீன் வட்டானை, ஏ.அஸ்பர், எஸ்.எம்.ஜெமீல், ஊர்காவல் மஜீத் போன்ற பலரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.