மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் அந்நூர் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் (16) ம் திகதி செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இப் பாடசாலையில் தேசிய, மாகாண, வலய, கோட்ட மட்டங்கள் ரீதியாக சாதனை படைத்த மாணவிகளையும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகள் மற்றும் பாடசாலையில் அர்ப்பணிப்போடு சேவையாற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எஸ். இஸ்ஸதீன் அவர்களும் கௌரவ அதிதிகளாக கல்வித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.எம். ஹகீம், ஓட்டமாவடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே. ரகுமான் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஊர்ப்பிரமுகர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இதில் மாணவிகளின் சிறப்பான கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.