ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக கல்முனை மாநகர சபைத் தேர்தலில் பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான இஸட்.ஏ.எச்.றஹ்மானுக்கான கிளை திறப்பு விழாவும்,பொதுக் கூட்டமும் (18-01-2018)மாலை 4.00 மணிக்கு பெரியநீலாவணை வீ.சி வீதியில் இடம்பெறவுள்ளது.
வேட்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கலந்து கொண்டு கிளையைத் திறந்து வைக்கவுள்ளார்.இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களும்,அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.