உள்ளூராட்சித் தேர்தலின் ஐக்கிய தேசியக் கட்சியின் கிண்ணியா பிரதேச சபையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் குறிஞ்சாக்கேணி வட்டார வேட்பாளரின் அறிமுக நிகழ்வு நேற்று(17) புதன் கிழமை குறிஞ்சாக்கேணியில் மாகாத் நகரில் குறிஞ்சாக்கேணி வட்டார வேட்பாளர் ஏ.எஸ்.ஜாமுஜீப் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
கடந்தகால அரசியலில் ஐக்கிய தேசிய கட்சிக்கான அரசியல் பயணங்களை தாங்கள் எவ்வாறு முகங் கொடுத்தோம் தற்போதைய நல்லாட்சியில் கட்சியின் அதிக ஆதிக்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி தொடர்பிலும் மக்களின் அரச சார்பான நலன்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரின் உரையில் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தினால் மேலும் பிரதேச அபிவிருத்திகளை நாம் காணலாம் இதில் எவ்வித ஐயமுமில்லை பொருளாதார ரீதியிலும் சரி ஏனைய மக்களின் விடயங்களிலும் சரி இந்தத் தேர்தலின் முடிவுகளை பலமிக்க சக்தியாக யானைச் சின்னம் கிண்ணியா நகர சபை பிரதேச சபையை அமோக வெற்றி கொள்ளும் வெற்றி கொண்டால் தாங்கள் முழுமையான விருத்திகளை பிரதேசங்கள் ஊடாக தூய அபிவிருத்திக்கு இட்டுச் செல்வோம் கடந்த காலதற்போதைய போக்குவரத்தில் காபட் வீதிகள் உட்பட விவசாய மீனவர்களின் பிரச்சினைகள் இந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமே தன்னகத்தே கொண்டு தனது பலத்தை சாதகமாக வாழ்வாதாரங்களை உயர்த்தி நிறூபித்துள்ளது இதனை ஒரு கணம் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும்
அதை விடுத்து பொய்யான குற்றங்களை எம்மீது திணிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது எனவும் மேலும் கூறினார்.


