துஷாரா -
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கான பிரதேசத்துக்கு ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக அட்டாளைச்சேனை முதலாம் பிரிவைச் சேர்ந்த எம்.ஐ.முஹம்மது பைஷல் நியக்கப்பட்ட இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (27) கிடைப்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் விஷேட கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான மக்கள் பங்கேட்பை உறுதிப்படுத்துவதையும், ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்கை பொதுமக்களிடம் கொண்டு செல்வதையும் நோக்காகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டத்துக்காக வேண்டி அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கான பிரதேச தொடர்பாடல் அதிகாரப் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் இருங்கிணைப்பு செயலாளர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளர் பாலித லிஹினியகுமார ஆகியோரினால் இந்த நியமனக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
