நிந்தவூர் நலன் புரிச்சபையின் வருடாந்த ஒன்று கூடலும், NWC செய்தித்தாள் வெளியீடும் நேற்று (02) நிந்தவூர் அல்-அமீர் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.
முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளரும், தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி எம்.எம்.இஸ்ஷாக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ்.ரி.எம்.எம்.அன்சார் நளீமி, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான ஏ.ஏ.நசீர் அஹமட், ஏ.ஜமால்டீன் உள்ளிட்ட கல்விமான்கள், உலமாக்கள், வைத்தியக்கலாநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நிந்தவூர் நலன் புரிச்சபைத் தலைவர் எம்.எச். யாக்கூப் ஹசன் கருத்துத் தெரிவிக்கையில்:- 'எமது நலன்புரிச் சபை மூலம் உருவாக்கியிருக்கும் வட்டியில்லா வங்கியில் தற்போது ஒரு கோடியே 30 இலட்சம் இருக்கிறது. ஆரம்பித்த ஒரு வருடகாலத்துக்குள் 10 மில்லியனுக்கு மேல் ஏழை மக்களுக்காக உதவி செய்துள்ளோம்.
இறைவன் நாடினால் இன்னும் அதிகமாகச் செய்யவிருக்கிறோம். எனவே எல்லோரும் எம்முடன் இணைந்து செயற்படுமாறு அன்பாய் வேண்டுகிறேன்' எனக் கேட்டுக் கொண்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி எம்.எம்.இஸ்ஷாக் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'சமூகப் பணிகளில் ஈடுபடுவோர் என்றும் பெருந்தியாகிகளாவர். இவர்களுக்கு இதற்கான கூலி மறுமையில் தான் இறைவனால் வழங்கப்படும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி எம்.எம்.இஸ்ஷாக் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'சமூகப் பணிகளில் ஈடுபடுவோர் என்றும் பெருந்தியாகிகளாவர். இவர்களுக்கு இதற்கான கூலி மறுமையில் தான் இறைவனால் வழங்கப்படும்.
எனவே சமூகத்திலுள்ள சிலரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சத்தேவையில்லை. நாம் இறைவனைப் பயந்து நேரான வழியில் சென்றாலே போதும். அது எப்போதும் சமூக சேவையாளர்களைக் காப்பாற்றும்' எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் NWC செய்திகள்' எனும் சிறப்புச் சஞ்சிகையொன்றும் வெளியிடப்பட்டது. இதன் முதற் பிரதியை நிந்தவூர் நலன் புரிச்சபைத் தலைவர் எம்.எச். யாக்கூப் ஹசன் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீலுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.