எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் NFGG இரட்டைக் கொடி சின்னத்தில் தனித்தே போட்டியிடும்

NFGG ஊடகப் பிரிவு-

டைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG), தமது சின்னமான இரட்டைக் கொடி சின்னத்தில், தனித்துப் போட்டியிடுவதென கட்சியின் தலைமைத்துவ சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

சமீபத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்கு இரட்டைக் கொடி சின்னமும் வழங்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இந்தப் பின்புலத்தில் நேற்று முன் தினம் புதன்கிழமை (29.11.2017) கொழும்பில் கூடிய கட்சியின் தலைமைத்துவ சபை இது தொடர்பான மேலுள்ள இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

தற்போது பல்வேறு சபைகளுக்கான வேட்பு மனுக்களைத் தயார் செய்யும் பணிகளில் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -