கிழக்கு மாகாணத்தில் புதிய அரச வங்கி கிளைகள் திறக்கப்பட வேண்டும் –கபீர் காசிமிடம் இம்ரான் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் புதிதாக அரச வங்கிகளின் கிளைகளும் ATM இயந்திரங்களும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அமைச்சர் கபீர் காசிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற கட்டட தொகுதியில் வியாழக்கிழமை அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்தம் நிறைவுற்ற பின்னர் கிழக்கு மாகாண மக்களின் வங்கி பாவனை அதிகரித்துள்ளது. ஆனாலும் இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்வண்ணம் போதியளவு வங்கிகள் இப்பகுதியில் இல்லை. இதனால் பொதுமக்கள் பல மணிநேரம் வங்கிகளில் காத்திருக்கவேண்டியுள்ளது. அத்துடன் நகர்ப்புறங்களில் மட்டுமே வங்கிகள் காணப்படுவதால் கிராமப்புற மக்கள் வங்கி சேவையை பெற பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது.

மேலும் ATM இயந்திரங்களில் தினந்தோறும் நீண்ட வரிசையை அவதானிக்க முடிகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே கிழக்குமாகாணத்தில் இனம்காணப்பட்ட பிரதேசங்களில் புதிய வங்கி கிளைகளையும் இயந்திரங்களையும் அமைக்க வேண்டும் என தெரிவித்தார் .

அத்துடன் புதிய வங்கிக் கிளைகள் அமைக்கப்பட இனம்காணப்பட்டுள்ள பிரதேசங்களின் உத்தேச திட்டத்தையும் அமைச்சரிடம் கையளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -