இன்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் அழைப்பின் பெயரில் மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஏறாவூருக்கான விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன் போது ஏறாவூரில் அமைந்துள்ள பல பாடசாலைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்
செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் கல்வி அமைச்சின் செயலாளரை அழைத்து சென்று பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக அமைந்துள்ள விடயங்கள் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதன் அடிப்படையில் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்
செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் அழைப்பில் கல்வி அமைச்சின் செயலாளர்
சுனில் ஹெட்டியாராச்சி விஜயம் அமைந்து இருந்தது.
இதன் போது கல்லூரி முதல்வர் MM.முகையதீன் அவர்களினால் ஏரூர் பிரதேசத்தில் இன்னுமொரு தேசிய பாடசாலை அமைய வேண்டிய அவசியத்தையும் அதற்கான தகுதியை மட்/ மாக்கான் மாக்கார் வித்தியாலம் கொண்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் கையளிப்பு செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் ஏறாவூரில் இன்னுமொரு தேசிய படசாலை அமைய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி இருந்தார்.
