ஆதிப் அஹமட்-
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாலருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் முயற்சி மற்றும் வேண்டுகோளின் பேரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் எண்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் கொங்கிறீற்று வீதியாக அமைக்கப்படவுள்ள அன்வர் பாலர் பாடசாலை வீதி தொடர்பில் அப்பகுதி மக்களுடன் வீதி அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்பிலான விடையங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று (01.12.2017) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மேற்படி வீதியுடன் அவ்வீதியின் குறுக்கு வீதியும் கொங்கிறீற்று வீதியாக நிர்மாணிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இவ்வீதிக்கு நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களும் காத்தான்குடி நகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.சீ.எம்.நியாஸ் அவர்களும் களப்பயணம் மேற்கொண்ட போது அவ்வீதியின் நிலை புகைப்படங்களில் காணப்படுகின்றது.


