தொண்டமான் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு; ரஷ்ய தடை நீக்கத்திற்கு ஆதரவு - பதுளையில் போராட்டம்


க.கிஷாந்தன்-

தேயிலைத் தடையை நீக்கிய ரஷ்ய அரசுக்கு நன்றி தெரிவித்தும், தொண்டமான தொழிற்பயிற்சி நிலையம், பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையமாக மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீக்கப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை மீளவும் இணைக்கக் கோரியுமான இரு முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தி பதுளை மாவட்டத் தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டனர்.

குறித்த போராட்டம் 28.12.2017 அன்று ஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்றது.

இதில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -