சர்ஜுன் லாபிர்-
கரையோரம் பேணல் மற்றும் கரையோரம் மூலவள முகாமைத்துவ திணைக்களத்தினால் சட்ட விரோத நடவடிக்கைககளில் ஈடபடுவபர்களை கைது செய்து நிதிமன்றில் சமர்பித்து அதில் விதிக்கப்படுகின்ற தண்டப் பணத்தில் 50% கொடுப்பனவை திணைக்களம் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்குகின்றது.
இதன்படி கரையோர பிரதேசங்களில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சன்மான காசோலையினை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்கள் மற்றும் எம்.ஐ.எம். ஜசூர் (மாவட்ட உத்தியோகத்தர்-கரையோரம் பேணல்) ஆகியோரால் உரிய அதிகாரிகளுக்கு 2017.12.27 ஆம் திகதி புதன்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் வைத்து சன்மானம் வழங்கப்பட்டது.