ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் -
உலக வங்கியின் நிதியுதவிடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இரண்டாம் நிலை சுகாதாரத்துறை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி இடும் நடவடிக்கை இன்று (28)இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட, ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட பிரதேச வீடுகளில் வளர்க்கப்படுகின்ற சுமார் 107 செல்லப் பிராணிகளுக்கு இந்த நோய்த் தடுப்பூசி இடப்பட்டதாக ஏறாவூர் அரச கால்நடை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தை ஏறாவூர் நகர சபை மற்றும் அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன இணைந்து மேற்கொண்டது.
இன்று காலை 8.00 தொடக்கம் ஏறாவூர் - 05 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படுகின்ற செல்லப் பிராணிகளுக்கே இந்த தடுப்பூசி இடும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


