தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பு மனுவில் மீண்டும் பிழை, திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அவுட்!

காரைதீவு நிருபர் சகா-
ருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் திருக்கோவில் பிரதேச சபைக்கு போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பால் நேற்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு இப்பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற மாற்று அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்களால் ஆட்சேபனைக்கு உட்படுத்தப்பட்டது.

தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் இப்பிரதேச சபைக்கு போட்டியிட பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த தலைமை வேட்பாளரும், இப்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான வி. புவிதராஜன், சக வேட்பாளர் அ. கலாநேசன் ஆகியோர் அவர்கள் கடமையாற்றுகின்ற அரசாங்க திணைக்களங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் அனுமதி பெற்று இருப்பதாக வேட்பு மனுவில் ஆவணப்படுத்தி இருக்கவில்லை என்பதே ஆட்சேபனை ஆகும்.

இருவரும் போட்டியிடுவதற்கான அருகதையை இழந்து விட்டனர் என்பதை அம்பாறை மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் அலுவலகம் ஆட்சேபனையை ஏற்று கொண்டு பிரகடனப்படுத்தியது.

சம்மாந்துறை பிரதேச சபை, ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆகியவற்றுக்கு தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவரால் சமர்ப்பிக்கப்பட்டு இராத நிலையில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -