அபூ மனிஹா, அய்ஷத்-
அட்டாளைச்சேனை பிரதேச கலை இலக்கிய விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பும். 21.12.2017 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் பிரதேச செயலாளர் திரு.ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், நிருவாக உத்தியோகத்தர் எம்.றபியுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும். மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றிம்சான் விசேட அதிதியாகவும்,பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்ரப் காலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எச்.எம்.றிபாஸ் மற்றும் நௌபிஸா, றஜாயா.உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர்.








