நுவரெலியா மாநகர சபையுடன் மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்




க.கிஷாந்தன்-
ள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை பிரிப்பு விடயத்தில் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த லவர்சிலிப் சின்னகாடு தோட்டத்தை பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இங்கு மாநகர சபைக்கு சேர்ந்து இருக்கப்பட வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபையுடன் மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி அத்தோட்ட மக்கள் 11.12.2017 அன்று வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது நுவரெலியா பொரலந்த நகரத்தில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலயங்கள் மேற்கொண்டனர்.

பெரிதாக இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க எத்தணித்த போதிலும், 50ற்கும் மேற்பட்ட மக்களே இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நுவரெலியா மாநகர சபையில் நேரடியாக சலுகைகளை பெற்று வந்த சுமார் 1000 வாக்களர்கள் நுவரெலியா பிரதேச சபைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தாங்களை மாத்திரம் மாற்றுவதன் மூலம் தங்களது அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -