பத்தூர் அக்ரம்-
இன்று அக்கரைப்பற்றில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் நடு நிசி தாண்டியும் அதிகாரமேயில்லா அதாஉல்லாவை சுற்றியிருந்த பல்லாயிரம் மக்களைக் காணக்கூடியதாக இருந்தது.
அத்துடன் நாட்டின் ஜனாதிபதி வரும் கூட்டத்திலேயே இவ்வாறு சனத்திரளைக் கண்ட மக்களுக்கு இன்றைய கூட்டம் பெரும் மகிழ்வைக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.
அதுபோல் அக்கரைப்பற்றில் குதிரைக்கு சவாலாக வந்திருக்கும் பலமிழந்த பேய்களை விரட்டாமல் விரண்டோடும் சந்தர்ப்பமாக இன்றைய கூட்டம் அமைந்த்திருந்தது என மக்கள் பலரும் பேசிக்கொண்டமையும் கேட்கக் கூடியதாக இருந்தது.
எது எவ்வாறாயினும் அக்கரைப்பற்றில் ஒரு ஆசனமேனும் பிரிந்து செல்லாமல் அத்தனையும் ஒற்றுமையாய் அதாஉல்லாஹ் பெற்றுக்கொள்வார் என்பதனை தெளிவாக இன்று மக்கள் காட்டிவிட்டனர். எனவே சமாதானமாக இப்பவே வெளியேறிச் செல்வதே பதவி ஒன்றுக்காய் ஊரைக் காட்டிக்கொடுக்கும் எதிரிகளுக்கு நாங்கள் கூறும் புத்திமதியாகும்.





