அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்- மஹிந்த தேசப்பிரிய

காரைதீவு  சகா-

னைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம், ஆரம்பப் பகுதியில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தேரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுவரையில் தேர்தல் வேட்புமனுக் கோரப்படாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு டிசம்பர் 04ஆம் திகதி, வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சட்டப் பிரச்சினைகளுக்கு உட்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தமையினை அடுத்து, கடந்த 27ஆம் திகதி அச்சபைகளுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றaங்களின் எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று வாபஸ் வாங்கிக் கொள்ளப்பட்டன. இதனை அடுத்து, உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான அனைத்து சட்டப் பிரச்சினைகளும் நீங்கியுள்ளன.
இந்த நிலையிலேயே, பெப்ரவரி ஆரம்பத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -