பொதுமக்களின் சேவை நலன் கருதியும், நகரசபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் 2018 ஆம் ஆண்டில் கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 2 இறைச்சிக் கடைகள் திறப்பதற்கும், கண்டலடிஊத்து மீண்பதனிடும் நிலையம் மற்றும் வைத்திய சாலை பைசிக்கிள் தரிப்பிம் என்பன கேள்வி கோரத் தீர்மாணிக்கப்பட்டு கேள்விகள் கோரப்பட்டதன் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வழங்க நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் நேற்று (27) கிண்ணியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.
மேலும் 2018ம் ஆண்டிற்கான மீன் சந்தை குத்தகைக்கு வழங்குவதற்கான 2வது மீள் கேள்விச் சபைக் கூட்டம் கிண்ணியா சபையின் கேள்விச் சபையின் தலைவரும், விஷேட ஆணையாளரும் செயலாளருமான என்.எம்.நௌபீஸ் தலைமையில் கிண்ணியா நகர சபையில் இடம்பெற்றபோதே இவ்வாறு மேலும் தெரிவித்தார்.
அத்துடன் வெளிப்படைத் தன்மையில் கேள்விகள் கோரப்பட்டு 2018 ஆம் ஆண்டுக்கான மீன் சந்தை, இறைச்சிக்கடைகள், கோழிக்கடைகள், கிண்ணியா வாராந்த சந்தை, வைத்திய சாலை பைசிக்கிள் தரிப்பிம், சிற்றுண்டிச் சாலைகள், மீண்பதனிடும் நிலையம் ஆகியனவும் தகுதிதியானவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.