அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி.!

ரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த மாதத்தில் மேலும் ஒரு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பெற்றுக்கொடுத்த 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு 5 கட்டங்களாக வருடத்திற்கு வருடம் அரச ஊழியர்களுக்கு உரித்தாகின்றது.

இது 2020 ஆம் ஆண்டு பூர்த்தியாகின்றது. இது தொடர்பான சகல அறிவித்தல்களும், சம்பள அதிகரிப்பு முறைமைகளும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

10 ஆயிரம் கொடுப்பனவுக்கு மேலதிகமாக 20 சதவீத கொடுப்பனவு ஒன்றும் ஊழியர்களின் சம்பளத்தில் சேர்க்கப்படும்.

ஒவ்வொரு சம்பள அளவுக்கும் ஏற்ற வகையில் ஊழியர்களின் அடுத்த மாத சம்பளத்தில் உயர்வு வழங்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -