இன்று கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலைகளிலும் பாம்புகள்:-அதிர்ச்சிப் படங்கள்





ட்டக்களப்பு நாவலடியில் இன்று (02) காலை கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலைகலிலும் பாம்கள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள நிலையிலும் ஏது காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் இவ்வாறு மக்கள் மத்தியில் இன்றும் அச்சநிலையேற்பட்டுள்ளது.

அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடார்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -