யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி புதுப்பொலிவுடன் புனர்நிர்மாணம்







பாறுக் ஷிஹான்-

2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் எதிர்வரும் டிசம்பர் 23ம் நாள் இடம்பெற உள்ள நிலையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள் கடும் மழைக்கும் மத்தியில் நிறைவுறும் நிலையில் உள்ளன.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம் எச் எம் ஹலீம் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு யாழ் மாநகரசபை ஊடாக முழு முஸ்லிம் பிரதேசங்களினதும் வீதி மின்விளக்கு வீதி வடிகான்கள் மறுசீரமைப்பு போன்றவற்றிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி மீலாத் விழா அன்று குடிநீர் விநியோகத்தை சிறந்த முறையில் செய்தல் தொடர்பாக யாழ் மாநகர சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -