ஓட்டமாவடியில் ஸ்ரீ.மு.காங்கிரஸுக்குள் இருந்த தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட் மீண்டும் அமீர் அலியுடன்

ட்டமாவடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்காக எதிர்பார்த்திருந்த ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட் மீண்டும் பிரதி அமைச்சர் அமீர் அலியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கடந்த உள்ளூராட்சி மன்றத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டவர்.

பிரதி அமைச்சருடனான முரண்பாட்டினால் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீருடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கைகோர்த்திருந்தார்.

அத்துடன் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரினால் வீடமைப்பு அதிகார சபை தவிசாளராக நியமிக்கப்பட்டு செயற்பட்டு வந்ததுடன் அண்மையில் ஆளுநர் இப்பதவிகளை அதிரடியாக மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தி தொடர்பில் முன்னை நாள் பிரதேச சபைத்தவிசாளரும், வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான கே.பி.எஸ்.ஹமீட் அவர்களை இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது:


நான் எனது ஊரில் இருக்க விரும்புகிறேன். என் மக்களுக்கான அரசியலை மக்களுடன் இருந்து கொண்டே செய்வது நன்றாகவிருக்கும்  என்பதற்காக இன்னம் முடிவு எடுக்க வில்லை. அனைத்து தரப்பும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன முடிவு எடுக்கப்படும் என்று இப்பொழுது கூற முடியாது. ஆனால் மாற்றம் ஒன்று ஏற்படும் என்றும்  இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -