அம்பாரை மாவட்ட மக்களை சுதந்திரமாக தாம்விரும்பிய கட்சிக்கு வாக்களிக்க இடமளிக்க வேண்டும்- உதுமாலெப்பை.




எம்.ஜே.எம்.சஜீத்-

டைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்லில் அம்பாரை மாவட்ட மக்கள் தாம் விரும்பிய கட்சிகளுக்கு சுயமாக வாக்களிக்கின்ற நிலைமையினை உருவாக்க வேண்டும். சில அரசியல் கட்சிகள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக பொருட்களை வழங்கி வாக்குகளை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இம்முயற்சிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அம்பாரை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், அம்பாரை மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளரிடம் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கள் செய்த பின்னர் நடைபெற்ற கூட்டத்திலே முன்னாள் அமைச்சர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபரும், பிரதி தேர்தல் ஆணையாளரும் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கட்சி பிரதிநிதிகளும், பொது மக்களும் எழுத்து மூலமாக அறிவித்தால் அதற்கு தாங்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தீர்கள். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களிடம் அவர்களின் வறுமையை பயன்படுத்தி இலவசமாக பொருட்களை வழங்கி அம்மக்களின் வாக்குகளை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

ஜனநாயக விரோத செயற்பாடுகளை எழுத்து மூலம் அறியத்தரும் போது இவ்விலவச பொருட்கள் விநியோகம் நிறைவடைந்து விடும் எனவே, இவ்விலவச பொருட்களை வழங்கி ஏழைகளின் வாக்குகளை சூரையாடும் போது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள விசேட குழுவொன்றினை நியமிக்க வேண்டும். எனக் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரும், உதவி தேர்தல் ஆனையாளரும் கருத்து தெரிவிக்கையில் இது தொடர்பாக தொலைபேசி மூலம் அறியத்தருமிடத்து அவசர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததுடன் உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுவதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -