ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் அயராத முயற்சியினால் கல்முனை பிரதேசத்தில் கடற்கரைப் பூங்கா (பீச் பார்க்) அமைக்கும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீமின் 35.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த வேலைத்திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கல்முனை பிரதேச மக்களின் எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

