வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்




ங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடற்பிரதேசங்களை தவிர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்களிடம் காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -