ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வடிகானுக்குள் இருந்து மீட்பு..!

ட்டக்களப்பு, செங்கலடி பகுதியிலுள்ள வடிகானிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வடிகானுக்குள் இருந்தே இவ்வாறு இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொலிஸாருக்கு இன்று காலை வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் வடிகானிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -