சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட உள்ளூராட்சி தேர்தல் சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று பாசிக்குடா ஹாம் ஹோட்டலில் நடைபெற்றது.
அதில் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாகிர் மௌலானா அவர்களுக்கும்
முன்னாள் முதலமைச்சர் Z.A.நஸீர் அஹமட் அவர்களுக்கும் இடையில் சில கருத்து முறன்பாடுகள் ஏற்பட்டு வைரலாக பரவி வருவதால் அதனை தெளிவு படுத்தும் முகமாக
ஏறாவூரில் உள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலமை காரியாலயத்தில் ஊடக அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் முன்னாள் நகரசபை உறுப்பினர் வாசித் அலி
தனது கடந்த அரசியல் பயணத்தில் அலிசாகிர் மௌலானாவோடு இருந்ததாகவும்
2011 .03. நடத்தப்பட்ட உள்ளூராட்ச்சி தேர்தலில் இதே போன்று பெரியதோர் நாடகம் நடத்தியதாகவும் இப்படியான நாடகங்கள் எங்களுக்கு புதியது இல்லை என்றும் தெரிவித்தார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:
அலிசாகிர் மௌலானாவின் நாடகம் ஊரே அறிய கூடியதாக எதிர் வரும் உள்ளூராட்ச்சி தேர்தலின் முடிவாகும்
இவருடைய நாடக அரங்கேற்றம் உள்ளூராட்ச்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஆரம்பிப்பதாகவும்
இன்று முன்னால் முதலமைச்சர் தனது பாதணியால் என்னை தாக்க வந்த என்ற குற்றச்சாட்டும் ஒரு நாடகமே என்றும்
4தடவை பாராளுமன்ற உருப்பினராகவும்
2தடவை உள்ளூராட்ச்சி தவிசாளராகவும்
1 தடவை மாகாணசபை உறுப்பினராகவும்
இருந்த இந்த அலிசாகிர் மௌலானா
மக்களை ஏமாற்றும் நோக்கில்
சொந்தமாக வீடு இல்லை
கையில் பணம் இல்லை
என்று தனது சொந்த ஊரில் மக்களோடு வசிக்காது
கொழும்பில் பெரிய வீடுவாசலோடு வாகணங்களோடும் உல்லாசமாக இருப்பதை இவ் ஏறூர் மக்கள் அறியவில்லையா என்று
ஊடகங்களிடம் சுற்றிக்காட்டினார்.