முகம்மட் நசீர்-
இன்று (04/12/2017) காலை 08.00 மணிக்கு அலிஷாஹிர் மௌலானா, தலைவரை சந்திப்பபதற்காக தனது மகன் அம்ஜத் மௌலானா, தபாலக அதிபர் நஸீர், பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோருடன் பாசிக்குடா சென்றுள்ளனர்.
இன்று (04/12/2017) காலை 08.00 மணிக்கு அலிஷாஹிர் மௌலானா, தலைவரை சந்திப்பபதற்காக தனது மகன் அம்ஜத் மௌலானா, தபாலக அதிபர் நஸீர், பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோருடன் பாசிக்குடா சென்றுள்ளனர்.
அப்போது தலைவர் காலை உணவு எடுப்பதற்காக ஆயத்தமாகிறார்.
இவர்களும் காலை உணவை தலைவரோடு பகிர்ந்து கொண்டிருக்கும் போது,
முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமதும் அங்கு வருகை தந்து எல்லோருமாக காலை உணவை உட்கொண்டிருக்கும் போதே மாவட்ட அரசியல் விடயங்களை அலசிக் கொண்டிருந்தார்கள்.
உணவு உட்கொண்டு முடிந்தும் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருப்பதால், நேரமிகுதி காரணமாக அங்கிருந்த, தபால் அதிபர் நஸீர்,
தலைவரை பார்த்து "ஏறாவூர் விடயமாக பேசுவோம் "என்று கேட்டபோது,
சரி, வாங்க எனது அறைக்குள் சென்று பேசுவோம் என்று அனைவரையும் அழைத்துச் சென்றுள்ளார் தலைவர்.
அதற்கு முன்பாக.,
ஏறாவூர் உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் நியமிக்கும் விடயமாக தலைவர், மௌலானாவிடம் கேட்ட போது
முன்னாள் முதலமைச்சரும் நானும் இணைந்து இணக்கப்பாட்டுடன் வேட்பாளரை நியமிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.
தலைவரின் அறைக்குள் சென்றபோது.
ஏறாவூர் விடயமாக பேசுவதாக இருந்தால் தபாலதிபர் நஸீரோ, வேறு நபர்களோ இருக்கக்கூடாது என்று தலைவரை முன்னாள் முதலமைச்சர் கேட்டுள்ளார்.
அதன்படி சகோதரர் நஸீரும், அம்ஜத் மௌலானாவும் அறையிலிருந்து வெளியேறி, அருகாமையிலுள்ள கண்ணாடி அறையினுள் இருந்துள்ளனர்.
அப்போது தலைவரும், மௌலானாவும், முன்னாள் முதலமைச்சரும் தலைவரின் பாதுகாப்பு பிரிவில் ஒருவருமே இருந்துள்ளனர்.
ஐந்து, ஆறு நிமிடங்களில் தலைவரின் அறையினுல் பாரிய சத்தம் கேட்கத் தொடங்க,
வெளியிலிருந்த சகோதரர் நஸீர், அம்ஜத் மௌலானா ஆகியோருடன் பலரும் தலைவரின் அறைக்குள் சென்றுள்ளனர்.
அப்போது முன்னாள் முதலமைச்சரை தலைவரும், மௌலானாவை பாதுகாப்பு உத்தியோகத்தரும் இறுகப் பிடித்துக்கொண்டிருக்கும் போது,
முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமத், மௌலானாவை பார்த்து "நீஒரு ஹராமிடா, ஹராமிடா "என்று பலமாக சத்தமிட்டு செருப்பை களட்டி அடிப்பதற்கு முனைவது போன்று காணப்பட்டுள்ளார்.
தலைவரின் அறை யுத்த களமாக மாறியிருந்த வேளை, தலைவர் மௌலானாவை பார்த்து கண்கலங்கி மன்னிப்புக்கேட்டு வெளியேறினார்.
குறித்த செய்தி தொடர்பில் அடுத்த தரப்பின் அறிக்கைக்காக:
