இவ்வருட தேர்தல் இடாப்புப் பதிவில் கம்பஹா மாவட்டத்தில் ஆகக்கூடுதலானோர் பதிவு

ஐ. ஏ. காதிர் கான்-

நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் இவ்வருடம் ( 2017 ) மேற்கொள்ளப்பட்ட தேர்தல் இடாப்புப் பதிவுகளின்படி, ஆகக்கூடுதலான பதிவுகள் கம்பஹா மாவட்டத்திலேயே இடம்பெற்றிருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்துள்ளார். 

கம்பஹா மாவட்டத்தில் இவ்வருடம் 17,24,309 பேர் பதிவாகியுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் இம்முறை 16,52,389 பேர் பதிவாகியுள்ளதாகவும் மேலதிக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வருட தேர்தல் இடாப்புப் பதிவுகளின் பிரகாரம் 1,57,60,867 பேர், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும், கடந்த வருடங்களை விட இவ்வருட தேர்தல் கணக்கெடுப்பின்படி 1,48,897 பேர் கூடுதலாகப் பதியப்பட்டுள்ளதாகவும் மேலதிக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய வாக்காளர்களது பெயர்கள் அடங்கிய இடாப்புக்கள், டிசம்பர் மாதம் முதல் சகல மாவட்டத் தேர்தல் காரியாலயங்களிலும், உள்ளூராட்சி மன்றங்களிலும், பிரதேச செயலகங்களிலும், கிராம சேவை அலுவலகர் காரியாலயங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -