என்னை அசிங்கப் படுத்தும் முகநூலாளர்களை CID யில் முறையிடவுள்ளேன் -ஏறாவூரில் மெளலானா

றிபாய் ஏறாவூர்-

வாவிக்கரை பூங்கா அபிவிருத்தி வேட்பாளர் அறிமுகத்தின் போது
பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலான தெரிவித்த சில கருத்துக்கள்

நேற்று வாவிக்கரை பூங்காவில்
வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியதோடு

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமோடு பாசிக்குடா ஹாம் கோட்டலில் உள்ளூராட்ச்சி தொடர்பாக கலந்துரையாடலில் முன்னால் முதலமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுக்கும் அலி ஸாகிர் மௌலானா அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளும் தெளிவுபடுத்தப்பட்டது

நேற்று ஒரே கட்சியில் இருக்கும்
எங்களை ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும்
ஒற்றுமையே எமது வெற்றிக்கு காரணமாக அமையும் என்றும் தலைவர் பேசினார்
அதில் எனது அபிப்பிராயத்தை கேட்க்க முட்பட்ட போது
மு.முதலமைச்சர் நீ பேசாதே என்று என்னை தடுத்தார்
அதற்க்கு  நான் தலைவருடன் பேச உரிமை இல்லியா என்று கேட்கும் போது காலில் இருந்த பாதணியை எடுத்துக்கொண்டு என்னை தாக்க முட்பட்டார்
மற்றும் என்னை அசிங்கமான வார்த்தை கொண்டு பேசினார்
இதுவே அவ்விடத்தில் நடந்தது என்று
கௌரவ அலிஸாஹிர் மௌலான தெரிவித்தார்

மேலும் கருத்து தெரிவிக்கையில்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நான் எனது பதவியை கண்ணியமாகவும் மிகவும் திடகாத்திரமாகவும் மிகவும் பவித்திரமாகவும் பாதுகாத்து வருகின்றேன்.
என்னிடம் எவ்வித ஊழல் பிரச்சினை இல்லை அதனாலேதான்
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு காணியில்லை
சொந்தமாக வீடு இல்லை என்ற பெருமைக்கு நான் உரிமை கொண்டாடுகின்றேன்.

கொமும்பில் இருக்கும் எனது வீடு வாடகையே
நான் சவால் விடுகின்றேன் எனது வீடு வாடகை வீடு இல்லை என்று நிருபித்து காட்டுங்கள்
என்னிடம் வருடா வருடம் ஒப்பந்த வாடகை பத்திரம் உள்ளது
பல மில்லியன் கணக்கில் செலவு செய்து வீடு கட்ட நான் ஒன்றும் ஊழல் செய்யவில்லை என்றும் முகநூலில் எனது குடும்பத்தை கேவலப்படுத்தும் முகமாக நான் அமேரிக்காவில் இருக்கும் போது வேண்டும் என்றே என்னை விடுதலை புலிகள் (டயஸ்புரோ)
போன்றோர் சில விடயங்களை எழுதினார்கள்.

அதனை தமிழில் மொழிபெயர்த்து முகநூலில் அசிங்கப்படுத்துகின்றார்கள்
இவர்களை CID யிடம் முறைப்பாடு செய்ய உள்ளோம் என்று தனது உரையில் கருத்து தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -