கல்முனையில் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா ஆசிரியர்களின் 100 வீதசித்தி மகிழ்ச்சிக்குரியது!





காரைதீவு  சகா-

ல்முனையில் முதன்முதலாக நடைபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியின் இறுதிப்பரீட்சைக்குத் தோற்றிய 29 பயிலுனர் ஆசிரியர்களும் சித்தியடைந்துள்ளனர். அதிலும் 17பேர் மெரிட் அதிவிசேடசித்திபெற்றுள்ளமை பாராட்டுக்கும் பெருமைக்குமுரியது.சம்பந்தப்பட்ட பொறுப்பாளர் சிவப்பிரகாசம் விரிவுரையாளர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன்.

இவ்வாறு ஆறுதல் ஸ்ரீலங்கா – கல்முனைப்பிராந்திய முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா ஆசிரியர்களின் ஒன்றுகூடல்
நிகழ்வில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்ட கல்முனை றோட்டரிக்கழக தலைவர் றோட்டரியன் மா.சிதம்பரநாதன் புகழாரம் சூட்டினார்.

கல்முனை நிலைய முன்பள்ளி ஆசிரியர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வ(2) சனிக்கிழமை கல்முனை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்றது..

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

இலங்கை முன்பள்ளிகளில் சிறுவர்களை எடுத்தவுடன் கல்வியைத் திணிக்காது சிங்கப்பூரில் கல்விதயார்படுத்தலுக்காக முன்பள்ளியில் 6மாதகாலம் பயிற்சி வழங்கப்படுகிறது.

அந்த ஆறுமாதகாலத்தில் ஒரு மாணவன் எவ்வாறு ஒரு கதிரையில் இருப்பது? சாப்பிடமுன்பு சாப்பிடும்போது சாப்பிட்ட பின்பு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் போன்ற பல விதமான ஒழுக்கம் சார்ந்த பயிற்சிகளே முதலில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதாவது எடுத்தவுடன் கல்வியைத் திணிக்காமல் கல்விக்கு தயார்படுத்தல் நடைபெறுகிறது.அதாவது மாணவர்கள் முதன்முதலாக முறைசார்ந்த கல்விக்காக தன்னை ஒழுங்குபடுத்தவே இப்பயிற்சி இடம்பெறுகிறது.

முன்பள்ளி ஆசிரியர்களும் முதலில் தன்மனநிலையை மாற்றிக்கொள்ளவேண்டும். மாணவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டும். இம்முறை திருக்கோவில் மற்றும் கல்முனையில் ஆக 40 ஆசிரியர்களுக்கு எமது நோட்டரிக்கழகம் மூலம் பயிற்சியைவழங்கினோம்.
எதிர்வரும் காலத்தில் தற்போதைய மாவட்ட ஆளுநர் கலாநிதி பண்டாரகிரியே சோமரத்ன தேரர் தலைமையிலே கூடுதலான ஆசிரியர்களுக்கு அப்பயிற்சியை வழங்கத்திட்டமிட்டுள்ளோம்.

எமது கல்முனை றோட்டரிக்கழகமானது பல சமதாய சேவைகளைச் செய்துவருகிறது.

வாழ்வாதார உதவிகளை செய்தல் போசாக்கு சிறுவர்துஸ்பிரயோகம் போன்ற பல பரப்புகளில் பல உதவிகளைச்செய்துவருகிறது. என்றார்.

ஆறுதல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பி.சிவப்பிரகாசம்; சிறப்புரையாற்றினார். விரிவுரையாளர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.

இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியைகளின் பல வித கலைநிகழ்வுகள் மேடையேறியதுடன் வளவாளர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன கல்முனை நிலைய முன்பள்ளி ஆசிரியர்கள் வட்டச்செயலாளர் திருமதி எஸ்.கலைவதனி நன்றி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -