உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடுவதற்கு சாய்ந்தமருதுவிலிருந்து தமது கட்சி வேட்பாளர்களை நிறுத்த மாட்டாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் முடிவு செய்துள்ளார் இந்த முடிவு என்பது மக்களின் முடிவேயாகும் அதனால் மக்கள் தெரிவு செய்த சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தின் முடிவின்படியே அமைச்சர் றிசாத் அவர்களும் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளுக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் நிலைப்பாட்டுக்கும் எதிராக தனது கட்சி செயற்பட மாட்டாது. என்பதை இந்த முடிவு மூலம் தெட்டத்தெளிவாக மக்களுக்கு கூறியுள்ளார் அத்தோடு சாய்ந்தமருதில் தனது கட்சி எந்த வேட்பாளர்களையும் நிறுத்த மாட்டாது என்ற தனது கட்சியின் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக சாய்ந்தமருதில் உள்ள கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்துள்ளார்.
வெற்றி, தோல்வி என்ற விடயங்களுக்கு அப்பால் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தின் தீர்மானத்துக்கு கட்சி என்ற அடிப்படையிலும் தனி நபர் என்ற ரீதியிலும் கௌரவம் அளிக்க வேண்டியுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகம் என்பது அந்தப் பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு. இந்த நிலையில் நாம் அவர்களின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படுவது அந்த மக்களின் அபிலாஷைகளையே குழி தோண்டி புதைப்பதாக கருத முடியும்.
#கட்சியின் #நலனை #விட #சமுதாயத்தின் #நலனே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம். இதை விடுத்து , எமது கட்சியின் நலனை மையப்படுத்தி போட்டியிட்டு பள்ளிவாசல் நிர்வாகம், ஊர்மக்கள் எங்களது கட்சி ஆதரவாளர்கள் என்ற மூன்று தரப்பினர்களிடையே பிரச்சினைகளை உருவாக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைமை விரும்பவில்லை தலைவரின் முடிவை மக்களும் ஆதரிக்கின்றனர்
எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருதுதில் வேட்பாளர்களை நிறுத்தமாட்டாது என்பதனை உத்தியோகபூர்மாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் தெரிவித்துள்ளார்
அதேவேளை, கல்முனைத் தொகுதியின் அபிவிருத்தியிலும் மக்களின் நலனிலும் தொடர்ந்தும் தனது கட்சி கவனம் செலுத்தும் என்றும் அமைச்சர் றிசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது மக்கள் எவ்வாறான விமர்சனங்கள், அல்லது வேறு வகையிலான அவமதிப்புகளை அந்த மக்கள் முன்னடுத்திருந்திருந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவர்களின் நலனில் என்றும் அக்கறையாகவே இருக்கும் என்பதை சாய்ந்தமருது மக்கள் மறந்துவிடக் கூடாது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நலனை மட்டும் மையப்படுத்தி அந்தப் பிரதேசத்துக்கு சேவை செய்யும் நோக்கம் கொண்டவர் அமைச்சர் றிசாத் அல்ல அவர் சமுதாய நலனுக்காகவே கட்சியை வழி நடத்திக்கொண்டிருக்கின்றார் என்பதனையும் இங்கு பொறுப்புடன் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
