மகனுக்கு பாடசாலை அனுமதி கிடைக்காததால்- தற்கொலை செய்து கொண்ட பொறியியலாளரான தந்தை

ந்தியாவின் பெங்களூர் எனுமிடத்தில், மகனுக்கு பாடசாலை அனுமதி கிடைக்காததால், தந்தை எரிபொருளை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

35 வயதுடைய, பொறியியலாளரான ரித்தேஷ் என்பவர், தனது ஏழு வயது மகனை நகரின் பிரபல பாடசாலையில் சேர்க்க விரும்பினார்.

ஆதித்ய பஜாஜ் என்பவர் மேற்படி அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி, 2.5 லட்ச ரூபாயை லஞ்ச முற்பணமாகப் பெற்றுள்ளார்.

எனினும் ரித்தேஷின் மகனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கொடுத்த பணத்தை ரித்தேஷ் திருப்பிக் கேட்டபோது, தர முடியாது என ஆதித்யா மறுத்துள்ளார்.

இந்நிலையில், பணத்தைக் கேட்பதற்காக ஆதித்யாவின் அலுவலகம் சென்ற ரித்தேஷ், கையோடு கொண்டுபோயிருந்த எரிபொருளை உடலில் ஊற்றிக்கொண்டு பணத்தைத் திருப்பித் தருமாறு அச்சுறுத்தியுள்ளார்.

அதைப் பொருட்படுத்தாததால், ரித்தேஷ் உடலில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து, ஆதித்யா மீது பொலிஸார் கொலைக்குத் தூண்டிய மற்றும் ஏமாற்றுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -