ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா நகர சபையின் செயலாளரும் விஷேட ஆணையாளருமான என்.எம்.நௌபீஸ் சபையின் பராமரிப்பில் உள்ள கட்டையாறு பொழுது போக்கு பூங்கா, விருந்தினர் விடுதி, கிண்ணியா பொது நூலகம், ஆலங்கேணி பொது நூலகம், திண்மக் கழிவு முகாமைத்துவப் பிரிவு, போன்ற இடங்களில் சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தருடன் இரவு நேர கள விஜயத்தினை நேற்றிரவு(19)மேற்கொண்டு பரிசீலனை செய்ததுடன் அவ்விடயங்களில் காணப்பட்ட முறைப்பாடுகளையும் கேட்டறிந்தார்.
அத்துடன் பொது மக்களின் முறைப்பாட்டுக்கமைவாக பொருத்தப்பட்ட வீதி மின் விளக்குகள் சம்பந்தமாகவும் பார்வையிடப்பட்டதுடன் மேலும் திருத்த வேண்டிய, பழுதடைந்த மின் குமிழ்களையும் பார்வையிட்டு திருத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக இதன்போது கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.

