ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்களுக்கு மழை அங்கிகள்






எம்.எம். முஹம்மட் பைறூஸ்-

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மழைக்காப்பு அங்கிககள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வைபவம் சூடுபத்தினசேனை திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் (சேதனப்பசளை உற்பத்தி நிலையம்) ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமாகிய எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் நடைபெற்றது.

திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவு, பூங்காக்கள் மற்றும் வெளிக்களக் கடமைகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த மழைக்காப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது எமது பகுதிகளில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியிலும், திண்மக் கழிவகற்றல் உட்பட பொதுமக்களுக்குரிய சேவைகளை எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளும் வகையில் ஊழியர்களுக்கு மழைக்காப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.

சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.எம். நஸீர், சுகாதார மேற்பார்வையாளர்களான எம்.ஜே. அல்பத்தாஹ், எஸ்.எம். அக்பர் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவப் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பீ.எச். றஹ்மான் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -