அப்துல்சலாம் யாசீம்-
அன்பின் பிறப்பே நத்தார் எனும் தொனிப்பொருளிலில் இன்று சனிக்கிழமை அரச நத்தார் தின விழா அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமானது.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சும் கிறிஸ்தவ மத திணைக்களத்தினூடாக ஒருங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஜோன் அமரதுங்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம பாராளமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ்
மஹ்ரூப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மாகாண சபை உறுப்பினர்கள் அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.